Friday, July 3, 2009

இப்படித்தான் இன்று வன்னிக் காதல்
Submitted by abisheca on Tue, 2009-06-23 05:24

கண்ணா..... வருவாயா.......?
காதல் முத்தம் தருவாயா.....?
உன்னைப் பார்த்த மயக்கம்.
இன்னும் போகவில்லை.
விழியில் தவழும் கண்ணீர்.
விரைவில் ஆறாய் மாறும்.
புவியில் வாழ்ந்த காலம்.
பூவாய் மாறிப் போகும்.

புயலே........... புயலே...........!
ஏன் இந்தக் கோபம்.
கடலே........... கடலே...........!
ஏன் இந்தத் தாகம்.
என் காதல் உடைந்துகல்லறை வாசல் செல்கிறது.
- உன்பாதம் பட்ட இடமெல்லாம்படுத்து உறங்குகிறேன் இன்று.
பண்ணிசை மன்னனே......
உன்பாட்டு என்னிடம்............!!!

மழையே.......... மழையே........!
ஏன் இந்த சோகம்.
மனமே............ மனமே............!
ஏன் இந்த வாதம்.
வாழ்வில் ஒரு படிவாழவில்லை என் காதல்.
பூவின் மணம் போல்பூக்க வில்லை நம் காதல்.

தேனே.......நீ........ எங்கே.......?
தேடுகிறேன்........உன் பாதம்...!!


விதியே...........விதியே..........!
ஏன் இந்தக் கோலம்.
சதியே.......... சதியே...........!
ஏன் இந்தப் பாவம்.
திரி கொண்ட தேசம்தீர்ப்புக் கிடைக்கவில்லை
இன்னும்வெறி கொண்ட வேதம்வெந்து போனது
எம் தேசம்மனமே..........
நீ உள்ள தூரம்என்னை அழைக்க மறந்து விடாதே ...!!

எரி குண்டே ....... எரி குண்டே.......!
ஏன் இந்த நாசம்வான் குண்டே......வான் குண்டே......!
ஏன் இந்த அகோரம்.
கூடு விட்டு கூடு வந்தநம் காதல் சேர முன்.
என் இதயத்தைப் பறித்துவிட்டாயே.
இதயமில்லாக் குண்டே.....
இனி என் வாழ்வு
இருட்டுக்குள் சங்கமம் தனா...?...?...?

உங்கள் அபிசேகா.

No comments:

Post a Comment


எனது எண்ணம்...


My Songzz...