~பட்டும் திருந்தாத ஜன்மமா நாம்? இன்னும் ஏன் இப்படி?
~உதயா போராட்டவாதியாகவே இருக்கட்டும். நம்முள் ஒருவனாக போராடட்டும்.
~முதலில் அவரை ஒரு போராட்டவாதியாக சாதிக்க விடுவோம். முதலில் சாதிக்கட்டும். நமக்கு உதவட்டும். பின்பு அரசியலுக்கு போகட்டும்.
~நல்லவனையும் சாக்கடையில் தள்ளவேணாம். தானாக விழுந்தால், அவரது துரதிஷ்டம்.
~ஊரை கூட்டி காட்டுவெதெல்லாம் சாதனையல்ல. அதுவும் அவர் தனியாக நிற்கவில்லை.அவர் கைகோர்த்து நின்றவர் எல்லாம், இப்போது எங்கே? தனிக்கருத்துக்களால் பிரிந்துவிட்டனரா? ஐந்து பேரை ஒன்றாக வைத்திருக்க இயலாதவர், பல கருத்து, பல நிலை, பல மொழிகள் என இருக்கும் நம்மவர்களுக்கு தூணாக நிற்பாரா? இல்லை நமக்கு ஏற்கனவே உள்ள சுமைகளில்; பத்தோடு பதினொன்னு, அத்தோடு இதுவும் ஒன்னா?
~இதுவரைக்கும் அவர் தனித்து செய்த சேவைகளை பட்டியலிட இயலாது. அவர் பின்னால் துணைக்கு நின்றவர் பலபேர். எல்லாரும் ஒன்றாக இணைந்து அரசியலுக்கு வரட்டும். நாம் கைதட்டுவோம். கைகொடுப்போம்.
~நமக்குத் தேவை ஒரு நல்ல சமூக சேவையாளன். அரசியல்வாதியல்ல. “என்னையும் அரசியல்வாதி ஆக்கிவிட்டார்களே” என்று பின்னாளில், நம்மைப்பார்த்து குறை சொல்லக்கூடாது.
~அரசியல் ஒரு சாக்கடை. அதை சுத்தம் செய்ய போகிறேன் என்று சொன்னவர் எல்லாம், அதே சாக்கடையில் கப்பலோட்டியதை சரித்திரம் சொல்லும். சொன்ன வார்த்தை காத்தோடு போச்சு; கண்ட கனவு ஓட்(டு)டோடு போச்சு, கண்ணம்மா ! இப்படி சோகக்கதை பாடியதெல்லாம் இனியும் தொடரனுமா?
~அரசியலுக்குப் போனால், தன் நாற்காலியை காப்பாற்றிக்கொள்ளவே அவருக்குத் நேரம் பத்தாது. அறிக்கை விடுவதில் சிந்தனை எல்லாம் இருக்கும். இதில் நம்மை பற்றி நினைக்க போறாரா? கோரிக்கைகள் வைக்கும் நாமே அவருக்கு முதல் எதிரியாய் தோன்றுவோம். அவர் விளம்பரம் படுத்தும் நிகழ்ச்சிகளே அவருக்கு முக்கியமாய் தெரியும்.
~இனியும் திண்ணை பேச்சு வேணாம். விளம்பரத்தில் மயங்க வேணாம். அறிவுபூர்வமாக யோசிப்போமேயானால், நமக்குத் தேவை ஒரு சுயநலமில்லா சமூகவாதி,போராட்டவாதி ! அரசியல்வாதியல்ல !
~என் சமுதாயதிற்கு கைகள் கொடு ! கயிறு வேண்டாம் !
#~ கண்ணன் (பூச்சி)
No comments:
Post a Comment