200 ஆண்டுகளா இருந்தார்கள்?
200 ஆண்டுகள் அந்த கம்பத்தில் இருந்தோம்! என்பது பெருமைக்குரிய விஷயமா?
சற்று யோசித்து பாருங்கள்.
சட்ட விரோதமாக ஒரு நிலத்தில் இதுவரை இருந்துவிட்டு, இப்போது பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கமா? இல்லை இல்லை. இதைதான் முழு பூசணிக்காயை ஒரு பிடி சோற்றில் மறைப்பது என்பார்களோ!
500 ஆண்டுகள் கூட, மாற்றான் நிலத்தில் இருக்கலாம் என்பது நியாயமா? அரசாங்கம், என்ன ஊருக்கு இளைத்தவனா? இது ஒரு தனியார் நிலமாக இருந்திருந்தால், இந்நேரம் நிலைமை தலைகீழ். இவர்களுக்கு போராட யார் வந்திருப்பார்? இப்போது தெரிகிறதா?எல்லாம் அரசியல்; அக்கறை அல்ல! எல்லாம் நாடகம் ! ஆடு நனையுதே..ஓநாய் கதறுது!
இங்கு குடியிருந்த மக்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டும். கேட்க யாருமில்லை, கட்டணம் எதுவுமில்லை என்றால் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் தங்கிக்கலாமா? இதைப்பற்றி இதுவரை யோசித்தது கூட இல்லையா? ஏதாவது ஒரு நடவடிக்கை? எதுவும் இல்லையே!
அரசு நிலமாக இருந்த நிலத்தில் 200 ஆண்டுகள், 4 தலைமுறைகள் இருந்த நிலத்தை மீட்க, ஆண்டு கணக்காய் அதிக வாய்ப்புகள் இருந்தும், சும்மா இருந்துவிட்டு, இன்று தனியார் நிலமாய் மாறியபின், அய்யோ..அய்யய்யோ என்று அலறுவதா?
சரி நிலம் தருகிறேன்..200 ஆண்டுகளுக்கான வாடகை கொடு என்று கேட்டால் என்ன செய்வீர்கள்? அதையும் தவறு என்று சொல்வீரா? உன் நிலமாய் இருந்தால் விடுவீரா?
200 ஆண்டுகள் வாயை மூடி கிடந்த அரசாங்கம் இப்போது துரோகியா? இப்போது திடீரென அக்கறை வந்தது போல் நடிக்கும் கட்சிகள் சகோதரனா?
உங்களை வைத்து ஆதாயம் தேட புறப்பட்டு விட்டன பல கட்சிகள். உங்களை எறிய விட்டு, அவர்கள் குளிர் காய்கிறார்கள். விளம்பரத்தில் மயங்கி விடாதீர்கள். உங்கள் தேவைகளை நீங்களே கேளுங்கள். நிச்சயம் உதவி கிடைக்கும். நடந்ததை ஆராய்ச்சி செய்து என்ன இருக்கு? நாளை என்ற நாளை நமக்கு சாதகமாக மாற்றுவோம்!
(குறிப்பு: இப்போது அரசியக் உதவியாளரான தியோ பெங் ஹாக் என்ற பிரச்சனை அதிக விளம்பரம் கிடைப்பதால், எல்லா கட்சிகளும் அங்கேதான் பாயும் படுக்கையுமாய் இருக்கிறார்கள்.)
// அரசாங்கம், என்ன ஊருக்கு இளைத்தவனா? //
ReplyDeleteநல்ல தெளிவான கேள்வி.
அது சரி, தியோ பெங் ஹாக் மரணத்திற்கு உடனடியாக அரச ஆணைக் குழு அமைத்த அரசாங்கம் ஏன் குகனின் விசயத்தில் மவுனம் சாதிக்கிறது?
தியோ பெங் ஹாக் பணக்கார சமூகத்தை சேர்ந்தவர்.
குகன் சிறும்பான்மை ஏழை சமூகத்தை சார்ந்தவர்.
ஒரே மலேசியாவில் இருவரும் ஒன்றுதானே?
சிறும்பான்மை ஏழைகள் , என்ன ஊருக்கு இளைத்தவர்களா?
இல்லை அன்பரே! அப்படி அல்ல.
ReplyDeleteதியோ பெங் ஹாக்-க்கு ஆதரவாக கூடிய கூட்டத்தை பார்த்தீரா? பல்லின மக்கள் உள்ளனர். இது ஒரு தேசப்பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
ஆனால் குகன் விஷயமோ, இனப்பிரச்சனை போல் சித்தரிக்கப் பட்டுவிட்டது. நம்மவர் பிரச்சனைகள் எல்லாமே, செவிடன் காதில் ஊதிய சங்காய் போகுமென்பது ஒரு சாபக்கேடு போலும்.
(சிறும்பான்மை ஏழைகள் , என்ன ஊருக்கு இளைத்தவர்களா?) - கொளுத்த பணக்காரர்கள் எங்கே?